நகைச்சுவை துணுக்குகள் 19

ஆபீசர்: நீங்க இந்த ம்யூசியத்திலே இருந்த ஆயிரம் வருஷமான புராதனச் சின்னத்தை உடைச்சிட்டீங்க.


பார்வையாளர்: நல்ல வேளையாப் போச்சு. நான் பயந்தே போயிட்டேன்பு, து சின்னத்தைத்தான் உடைச்சிட்டோமோன்னு. ரொம்பப் பழைய சின்னம்தானா அது? அதுக்குப் போயி ஏன் இவ்வளவு பதட்டமும் கவலையும் படறீங்க?

**************

நான் கல்யாணமாகி ரொம்ப நாள் கழிச்சி முதல் தடவையா வீட்டுக்கு வந்தபோது, எங்க அம்மா திருஷ்டி கழிக்க என்னை வாசல்லேயே நிறுத்தி "உனக்கு சுத்தி போடணும். சுத்திப் போட்ட பிறகு, நீ வலது காலை வெச்சு, வீட்டுக்குள்ளே வா"ன்னு சொல்லி ஒரு நிமிஷம் வாசல்லே நிக்கச் சொன்னாங்க.

அதுக்குள்ளே என் பக்கத்துலே நின்னுக்கிட்டிருந்த என் அண்ணன் பையன் அவன் கையிலே வச்சிருந்த சுத்தியை என் கால்லே போட்டுட்டான்.


அப்படின்னா திருஷ்டி கழிக்க சுத்தி போட்டாச்சுன்னு சொல்லு.
***************
உலக மகா மேதைன்னு உலகமே புகழ்கிற அந்த அறிஞர் ஏன் எப்பவும் வருத்தமாவே இருக்கார்?


அவர் எவ்வளவு பெரிய மேதையா இருந்து என்னங்க பிரயோஜனம்? வீட்டுலே அவர் பேச ஆரம்பிச்சாலே "உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. சும்மா கெடங்க" ன்னு சொல்லி மூணாம் க்ளாஸ் கூட படிக்காத அவர் மனைவி விடாம அவர் வாயை அடக்கிக்கிட்டே இருந்தா அவருக்கு வருத்தமா இருக்காதா?
*****************
ஏன் எல்லாப் புயலுக்கும் பெண்கள் பேரையே வெக்கிறாங்க?


ஏன்னா ஒரு புயல் வந்ததுன்னா உங்க வீடு, வாசல், கார், சொத்து எல்லாத்தையும் அழிச்சிட்டுப் போயிடுது இல்லே? அதான்
***************

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (17-Jul-20, 3:02 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 136

சிறந்த நகைச்சுவைகள்

மேலே