கண்ணன் என்னும் கருநீல மாணிக்கம்
மழைக்காலம்.... கருநீல மேகம்
ஒன்று தனியே விண்ணில் காட்சியளித்தது
என் நினைவெல்லாம் கொண்டால் மணிவண்ணன்
கண்ணன் மீதே நிலைத்திருக்க ...... எங்கோ
தூரத்து இடியோசை.... என் காதில்
கண்ணனின் பாஞ்சஜனியத்தின் ஓசையாய்க் கேட்டது
சற்றே கண்மூடி கண் திறந்தேன்
என்முன்னே காளமேகன் கண்ணன் நின்றிருந்தான்
நான் பார்த்த கருநீல மேகம்
என்முன்னே காளமேகமானது கண்ணனாய்
இடை டையே சிறு மின்னல் கொடிபோல்
வந்து போனது என் கண்ணிற்கு
அவன் சிரிப்பாய் காட்சி தந்து
கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேன்
கண்ணன் என்னும் கருநீல உருவை
உருவில்லா அவன் உருவிலும் வருவான்
எவ்வுருவிலும் நீ விரும்பும் ஏனெனில்
அருவமும் அவனே உருவமும் அவனே
பேரொளியும் அவனே ... ஒலியும் அவனே
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்ணன்
என்னும் கருநீல மாணிக்கத்தை