இருளிலிருந்து ஒளியை நோக்கி
![](https://eluthu.com/images/loading.gif)
ஒளிமங்கிய தீபத்தில்
வெளிச்சமில்லை
தூண்டினால் ஜோதி !
ஒளிமயமான சூரியன் சந்திரனுக்கும்
கிரஹண இருள் உண்டு
பூமியும் நிலவும் கதிரும்
வானத்தில் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு
என்பது அறிவியல் கூற்று !
இருள் சூழ்ந்த நெடிய குகையின் விளிம்பில்
ஒளியுண்டு என்பது ஆங்கிலக் கூற்று
இருள்படிந்த மனத்தில் தெய்வீகத் தீபத்தை ஏற்றி வை
ஆன்மீகப் பாதைக்கு அது வெளிச்சம் தரும் !
இருளிலிருந்து ஒளியை நோக்கி என்பது மறையின் கூற்று !