உன் விழிகள் இமைக்கு ஓய்வு கொடுத்தால் அந்தியின் அழகு
நிலவுக்கு ஓய்வு உண்டு ஒருநாள்
கதிருக்கு இல்லை ஒருநாளும்
மனிதனுக்கு ஓய்வுண்டு ஒவ்வொரு நாளும்
மனதிற்கு ஓய்வில்லை எந்நாளும்
தென்றல் ஓய்வு கொண்டால்
வசந்தம் வருகை புரியுமா ?
தொண்டன் ஓய்வு கொண்டால்
கட்சி வளர முடியுமா ?
ஊழியர் பணிஓய்வு பெற்றால்
ஓய்வு ஊதியத்தில் வாழ்வு
அன்றாட கூலியில் வாழ்பவன் ஒருநாள் ஓய்வு கொண்டால்
அன்றைக்கு வயிறு காலி
குளிர் காலத்தில் குயிலின் குரலுக்கு ஓய்வு
வசந்தத்தின் வருகையில் அது இசைக்கு வாழ்வு
உன் விழிகள் இமைக்கு ஓய்வு கொடுத்தால் அந்தியின் அழகு
ஓய்வு நீங்கி உன்விழிகள் திறந்தால் அது என் காதலுக்கு வாழ்வு !