சாலையோர பூக்கள்
வீடில்லா குழந்தைகளின்
பாதுகாப்பை உறுதி செய்ய
ஆகாயத்தில் பறக்கிறது
ஆளில்லா விமானம்
அறம் என்பது அவர்களுக்கு
ரொட்டியும் பிஸ்கட்டும்
வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய
அவர்களின் கற்பனையெல்லாம்
அவை பிளாட்பாரத்தில் உறங்காது
என்ற அளவில் மட்டுமே
பூரண ஆயுள் தான்
அவர்களுக்கு நித்திய கண்டம்