காற்றே
சொல்வாயா காற்றே ரகசியத்தை -பலர்
சொல்லாமல் விட்டுச்சென்ற ரகசியத்தை
அறிவிப்பாயா காற்றே ரகசியத்தை - பலர்
அறிவிக்காமல் எடுத்துச்சென்ற அன்பை
பாடுவாயா காற்றே பாடலாய் - பலர்
பதிவிடாமல் மனதுள் புதைத்த பாடலை
எழுதுவாய காற்றே கதையை - பலர்
எழுதாமல் விட்டுச்சென்ற வாழ்க்கையை