இரவின் பயணம்

பகலின் பழிவாங்கலை
உள்வாங்குகிறாயோ ?
உயிரிழப்புகளை
உணர்வேட்டினுள் பதிவிடுகிறாயோ?
வறுமையின் வீரியம்
குறைய வருடிவிடுகிறாயோ ?
காதல் தோல்விகளை
கனவுகளுக்குள் மூழ்கடிக்கிறாயோ ?
ஆதரவில்லாத பெற்றோரை
அரவணைக்கிறாயோ ?
காவல் அடக்குமுறைகளை
கண்ணீரால் கழுவிவிடுகிறாயோ ?
அடுத்தவேளைக்கு உணவில்லாதோர்க்கு
இது உறங்கும் நேரமென
உத்தரவிடுகிறாயோ ?
உனது வெளிச்சமற்ற பயணம்
மனிதர்க்கு மகிழ்ச்சியைத் தரட்டும்.

எழுதியவர் : இளங்கதிர் (21-Jul-20, 2:32 am)
சேர்த்தது : இளங்கதிர்
பார்வை : 95

மேலே