கொசுக்களே கொஞ்சம் ஓய்வெடுங்கள்
கொசுக்களே கொஞ்சம் ஓய்வெடுங்கள்
===================================
அடிக்கடி கடிக்கிறாய்
அடிக்க அடிக்க நடிக்கிறாய்
தடிக்கி விழுந்ததாய் துடிக்கிறாய்
அடிக்கிய நூல்களை அளவெடுக்கிறாய்
ஒற்றை அடியில் விழுகிறாய்
நெற்றி கடிக்க எழுகிறாய்
சுற்றி சுற்றிப் பயணித்தே
வெற்றி கீதம் இசைக்கிறாய்
முயற்சி தொடர்ந்து செய்கிறாய்
பயிற்சி எங்கோ எடுத்திட்டாய்?
அயர்ச்சியாக தூங்கும் வேளை
தொடர்ச்சியாக கடிப்பதும் ஏனோ?
உருவத்திலே சிறிதாய் இருந்தும்
பெரியதாக நோய்கள் தேடி
தருவதிலே நீயும் கேடி
மருவாதையாய் போவாய் ஓடி
கைக்கெட்டா தூரம் உடம்பில்
எங்கேயென்று உனக்குத் தெரியும்
வஞ்சிக்கும் மனிதர் போலே
அஞ்சாமல் வஞ்சிப்பதும் ஏனோ?
ஒழிக்கும் சாதனம் அனைத்தும்
பழகிக் கொள்ளும் உன்னிடம்
அழிக்கும் வழியும் தெரியல
செழிப்பாய் வாழ்கிறாய் நீதான்!
அ.வேளாங்கண்ணி