கார் நிறத்தாள் குறும்பாய் பார்த்தாள் சிரித்தாள்

மாங்கனி மாதுளை தொங்கும் கனித்தோட்டம்
பூங்காபோல் பூத்துக் குலுங்கும்தென் னம்பூக்கள்
தென்னை இளநீர் சுவைத்தேன் பலாக்கனி
தென்றலில் ஆடிடும் தோப்பு !

கனிகாய் பறிக்கநீ வந்தாயோ தோட்டத்தில்
சும்மா நடைபயில வந்தாயோ காரழகே
வெட்டித் தரவோ ஒருபலாவை எப்படிநீ
கட்டிச்செல் வாய்பூங்கை யில் ?

வெட்டிப் பலாவை உரித்துக்கை யில்தந்தால்
கச்சா கிடக்கும்என் றாள்கார் நிறத்தாள்
குறும்பாய்பார்த் தாள்சிரித் தாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jul-20, 10:41 am)
பார்வை : 59

மேலே