உன் வாழ்க்கை உன் கையில்தான் 555
தோழா...
தாயின் கருவிலே கலையும்
சில குழந்தைகள்...
பிறந்த சில மணித்துளிகளில்...
தூக்கி எறியப்படும்
சில குழந்தைகள்...
இதற்க்கு இடையில்
நீயும் பிறந்தாய்...
இறைவன்
என்ன கொடுத்தார்...
பெற்றோர்கள் என்ன
செய்தார்கள்
என்று கேட்காதே...
என்று கேட்காதே...
இந்நிலையில் நீ இருப்பதே
கடவுள் கொடுத்த வரமும்...
உன் பெற்றோர்கள்
இட்டபிச்சையும்தான்...
உன் வாழ்க்கை பிறர்க்கு
வேடிக்கையாக இருக்கலாம்...
உன் வாழ்க்கையை
நீதான் வாழவேண்டும்...
பட்டை தீட்டதீட்டத்தான் வைரத்தின்
மதிப்பும் ஜொலிப்பும் கூடும்...
உன் வாழ்க்கையை
பட்டை தீட்ட தீட்டத்தான்...
வைரமாய் ஜொலிப்பதும்
மதிப்புக்கூடி இருப்பதும்...
உன் வாழ்க்கை
உன் கையில்தான்...
கிடைத்த இந்த
பிறவியை வாழ்ந்துபார்...
மற்றவர்கள்
பொறாமைப்படும் அளவிற்கு...
வாழ்க்கை இழப்பதற்கு
அல்ல
எதையும் சாதிப்பதற்கே.....
எதையும் சாதிப்பதற்கே.....