பணம் பணம்
நிலையில்லா உலகம்
நிலையில்லா வாழ்க்கை
நிலையில்லா மனிதர்கள்
இப்படி...யாவும்....! !
நிலையில்லையென
தெரிந்தும்...மனிதன்
பணம்....பணம்....என்று
ஓய்வின்றி பாடுபட்டு
பணத்தை சேர்த்து
களைத்து போய்
ஓய்வு எடுக்க
நினைக்கும் போது
அனுபவிக்க தவறிய
இனிமையான
இளமை வாழ்க்கை
முதுமை அடைந்து
விடுகிறது....! !
--கோவை சுபா