புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 36---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௩௬

351. உன் விருப்புகளோ? வெறுப்புகளோ?
நீ எடுக்கும் முடிவாக இருக்க வேண்டும்
அடுத்தவரைப் பார்த்து அம்முடிவை எடுத்தால்
உன் வாழ்க்கை உனக்கு இல்லை.

352. மனிதன் இருவரிடத்தில் அதிகம் கோபத்தைக் காட்டுவான்
ஒன்று விரும்புவரிடம்
ஒன்று வெறுப்பவரிடம்.

353. நான் செய்யும் நல்லதைப்போல் நீயும் நல்லதைச் செய்து பழகு
இதைச் சொல்வதற்கு உண்மையான நல்லவர்கள் குறைந்தே விட்டனர்.

354. நீ எத்தனை பேரழகாய் இருந்தாலும்
குணம் சரியில்லை என்றால் அசிங்கமாகவே இருப்பாய்.

355. அந்தப் பக்கம் கள்ளிப்பால், இந்தப் பக்கம் கறந்தபால்
மனிதனின் மனம் எப்போதும் மதில்மேல் பூனையாகவே இருக்கும்.

356. தன்னிடம் இருக்கும் குறைகளை மறைப்பதற்குப்
பிறரிடம் குறைகளைத் தேடச் சொல்கிறது மனித மனம்.

357. உன் குறைகளை உன்னிடம் சொல்பவரை எதிரியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்
உன் குறைகளைப் பிறரிடம் சொல்பவரை நண்பராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளாதே.

358. கெட்டவர்களால் விதைக்கப்படும் கொடியது
நல்லவர்களின் அமைதியால் வளர்க்கப்படுகிறது.

359. ஒன்றை இழக்கும் போதே கவனமாய்
இருந்துகொள் இல்லை என்றால்
ஒவ்வொன்றையும் இழந்து தனித்து இருக்க நேரிடும்.

360. பறவைகளைப்போல் பறந்து செல்ல ஆசைப்படுவதை விட
பறவைகளைப்போல் பகிர்ந்து வாழ ஆசைப்படு
இதே உலகம் நாளையும் இருக்கும்.


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (27-Jul-20, 7:52 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 163

மேலே