முகநூல் பதிவு 57

ஆற்றல் அரசே! அடலேறே!
அம்மா மனம் கவர்ந்த அகர் விளக்கே!
அனைத்து மக்களின் சுடர் விளக்கே!
அண்டி வருவோர்க்கு அயரா விளக்கே!
தொண்டு செய்வதில் தூங்கா விளக்கே!
துயர்கண்டு தீர்ப்பதில் துணிவு விளக்கே!
தொண்டர் மனதில் அணையா விளக்கே!
எம் மன்றம் வந்த மாமணி விளக்கே!
எம் மனதில் நீங்கா கலங்கரை விளக்கே!

மக்கள் அழைகுரலுக்கு சேவகனாய்
பேசிப் பழகிட நல் சினேகிதனாய்
அரவணைப்பதில் அன்பு அன்னையாய்
அள்ளித்தருவதில் ஆபுத்திரனாய்
அரசியல் நாகரீகத்தில் அண்ணாவாய்
ஆதரிப்பதில் புரட்சித் தலைவராய்
பேச்சில் தெளிந்த நீரோடையாய்- மக்கள்
மூச்சில் கலந்த உயிர் காற்றாய்
எத்தனை எத்தனை பரிணாமங்கள்
உம்மில் கண்டு வியந்தோம் யாம்!

கலிங்கம் வென்ற அசோகன் போல்
பாதை யாவும் சீரமைத்து
நடைபாதை ஓரங்களில் மரம் வைத்து
சமூகக் கூடங்கள் பல நிறுவி
சாலமனாய் உயர்ந்து விட்டாய்!
சாலை நெரிசலுக்கு நிவர்த்தியாய்
மேம்பாலங்கள் நனி அமைத்து
பகுதி மக்கள் மனதினிலே
பகீரதனாய் இடம் பிடித்தாய்!

முகவுரை உமக்குத் தேவையில்லை
முடிவுரை என்றும் உமக்கில்லை- என்
வாழ்த்துரை என்றும் பொய்த்ததில்லை-உம்மை
முடிசூடா மன்னன் என்றாலது மிகையில்லை!

கவிதாயினி அமுதா பொற்கொடி!

எழுதியவர் : வை.அமுதா (29-Jul-20, 7:37 pm)
பார்வை : 45

மேலே