கண்ணாடி

மனித பிம்பங்களின்
உண்மை தன்மையை
படம் பிடிக்கும்
கண்ணாடியே...! !

எனக்கு தெரியும்
உனக்கு பொய் சொல்ல
தெரியாது என்று...! !

ஆனால்...
உனக்கு ஓரு சவால்...! !

வானிலை
அறிக்கையை விட
வேகமாக மனம் மாறும்
என் காதலியின்
பிம்பத்தை
படம் பிடித்து காட்டு
மின்னல் வேகத்தில்...! !

என் மனம் அவளிடம்
படும்பாட்டை அறிய..! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Jul-20, 3:31 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kannadi
பார்வை : 72

மேலே