முக்கூடல் - கடலோரக் கவிதை
மயக்கும் மாலை நேரம்
கடற்கரையில் அவளும் நானும்
வந்து போகும் அலைகளை
எம்மையே மறந்து ரசித்து
எம்முள்ளங்கைப் பறிகொடுத்தோம்
வேறெங்குமில்லை உள்ளதை உள்ளத்திற்கு
என் அணைப்பில் அவள் , அவள் இதயம்
என் இதயத்தில் கூடி இப்போது
நாங்கள் கேட்டது ஒரே ஒரு டிக் டிக்
ஈருடல் கூட ஓருயிரானது i ஆனதங்கே
அந்த கடல் அலைதான் சாட்சி இதற்கு
சாட்சி எதுவென்றால் எங்கள் கூடல்
கடற்கரையில் முக்கூடல் ..... அல்லவா