எச்சரிக்கையுடன் இளம் பெண்கள்
வகுப்பறையில்
வண்ணத்துப் பூச்சிகள்,
மழலையர் பள்ளி!
வாசமுடன்
வாலைக் குமரிகள்,
கல்லூரி வாசலில்!
கடற்கரையில் வாலிபர்கள்,
காத்திருக்கும் தோழிகள்,
காதல் மயக்கம்!
காதலுடன் காத்திருக்கும்
கன்னிப் பெண்கள்,
மயக்கம் தீருமா!
மணம் பரப்பும் ரோஜாமலர்கள்,
மலர்களைத் தேடி வண்டுகள்,
எச்சரிக்கையுடன் இளம் பெண்கள்!

