இனிமேல் மழை காலம்

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு
" இனிமேல் மழைகாலம்"
கவிதைமணி : நன்றி
○○○

முக்காலத்து ள்ளொரு காலம்
அக்கால மினி யெக்காள மிடும்
விழாவா மழைத்துளி வந்து விழவா
உழவா விரைந்து எழுந்து உழவா

நேற்று அழுதோம் இன்று சிரிப்போம்
"இனிமேல் மழைகாலம்" நீயோ களம் செதுக்கினாய் தானியம் குவிக்க ஒரு
குளம் வெட்டினாயா நீரை சேமிக்க

இன்று சிரிப்போம் நாளை அழவோ
குறைக்கூறாமல் உதவக்கோறாமல்
நீருக்கு குறைவில்லையென காமிக்க
இம்முறை நீரை சேமித்து காட்டுவோம்

தாயில்லாது அநாதையாய் வாழலாம்
வாயில்லாது ஊமையாய் வாழலாமொரு
நோயில்லாது நாம் வாழும் போதிலும்
மழை நீரில்லாது வாழ்திட லாகுமோ

°°இனிமேல் மழைகாலம் °°

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (5-Aug-20, 2:29 pm)
பார்வை : 73

மேலே