கருப்பு

கவிதைமணி தந்த தலைப்பு
“ கருப்பு “
கவிதைமணி நன்றி
○○○
மரக்கிளையில் கூடு கட்டி குடியிருக்க
மரம் சாஞ்சிப் போச்சி||

கட்டாந்தரையில் வீடுகட்டி குடியிருக்க
வெள்ளம் அடித்து போச்சி||

மலையின் மேல் வீடு கட்டி குடியிருக்க
மலையும் சரிந்துப் போச்சி||

ஒருத்தி உள்ளத்தில் குடியமர்ந்தேன்
வீதியில் தூக்கிப் போட்டாள்||

உடம்பில் குடியிருக்கும் உயிரை
பிரித்து மயானம் சேர்த்து - உயிரை||

சொர்கத்தில் குடியிருக்கும் தெய்வமே
உம்காலடியில் கிடக்க விடமாட்டாயா||

இருந்ததை நினைவு கொள் இருப்பது
நலமாகும் இனிமேலும் சுகமாகும்||

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (5-Aug-20, 2:35 pm)
Tanglish : karuppu
பார்வை : 65

மேலே