அதிரூபன் தோன்றினானே
கவிதைமணி தந்த தலைப்பு
" அதிரூபன் தோன்றினானே"
கவிதைமணி நன்றி
○○○
சதிரூபம் நிறைந்திட்ட உலகில்
விஸ்வரூபம் தலை விரித்தாடிட
விதிரூபம் தொடங்கி இயங்கியது
மதிரூபம் மங்கியது கலங்கியது அக்
கதிரூபம் கலைத்திட பிறவி பெறாத
நீதிரூபன் பிறப்பான் எனவோரசரீரு
தபரூபம் கொண்டோர் மூலமாய் கூற
ஸ்திரிரூபம் ஒருவளை தேர்ந்தெடுத்து
பதிரூபம் தொடாது அவள் வயிற்றில் கருரூபம் கொண்டு பிறப்பெடுத்திட்ட
அதிரூபன் தோன்றினானே ஒப்பற்று
சொரூபன் மகனாக மனுகுலத்தில்
இழந்த சவத்திற்கு உயிரீந்தார் தானே
சடலமாகி பின் உயிர்த் தெழுந்தார் அவ்
வதிரூபன் தோன்றினானே ஒப்பற்று
இறைரூபன் மகனாக மனுரூபமதில்
□
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்