தீர்ப்பு உங்கள் கையில்

நான் யார்...?
நீ யார்...?
என்ற கேள்வி
சிந்தனையில்
உதிக்கும் போதுதான்
மனிதனின் வாழ்க்கையில்
மாற்றம் வருகிறது...! !

"நான்"
என்று நாம் அறிவது
நம் உடலை தான்...

"நாம்" இந்த உலகிற்கு
அறிமுகமாவதும் நம்
உடலை வைத்துதான்.

ஆனால்...!
"நான்"
என்பது வேறு என்று
இறந்துபோன மனிதனே
சாட்சியாகிறான்.

ஒருவனது
உடலை பார்த்துதான்
இறந்து விட்டான்
என்கிறோம்.

ஏன்...?
அவன் இயங்கவில்லை
ஆம்..
இதுகாறும்
அவனை இயக்கிய
"ஆன்மா"
இயங்கவில்லை.
இந்த உடலுடன்
சேர்ந்து இருந்த
"நான்" என்கிற "ஆன்மா"
இப்போதில்லை.

நான் யார்..? ?
நீ யார்..? ?
என்பது
உங்கள் சிந்தனைக்கு
தீர்ப்பும் உங்கள் கையில்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (5-Aug-20, 4:08 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 81

மேலே