அன்பே சிவம்

கவிதைமணி தந்த தலைப்பு
“ அன்பே சிவம் “
கவிதைமணி நன்றி
○○○
அன்பிலா வித்தை குழிதோண்டி
ஊன்றி இழிவுநீரூற்றி வளர்த்து

கோடரியால் வெட்டிச் சாய்த்து
தீமூட்டி குளிர் காயும் ஜகமிதிலே அன்பில்லையாம் அஃதே அத்துள்
சிவமு மில்லையெனக் கண்டார்

ஒருவர் நற்செயலினைக் கண்டு
அகமகிழ்ச்சி கொண்டோ மென்று முகமலர்ச்சியில் காணும் போதவ் வன்பேசிவ மென்றுத் தோன்றுமே

நன்மையாவும் அன்பிலிருந்தே
துளிர்விடு மவ்வன்பே சிவமாகும்
தீமையாவும் அன்பின்மையாலே
நிகழ்பவை சிவமின்றி சவமாகும்

அன்பை இழந்து வாழும் வாழ்க்கை
சிவமில்லா தொரு நரகமென்பார்
அன்பில் தோய்ந்த வாழ்க்கையன்
பில் சிவம் கலந்த மோட்சமேயாம்

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (5-Aug-20, 2:33 pm)
பார்வை : 159

மேலே