காதலாகிக் கசிந்துருகி

காதலாகிக் கசிந்துருகி
பெண்ணே!
அன்றொரு நாள்
நீ விழி கொத்திப் பறந்தாய்
என் மன வெளியில்!
மறுகணமே
என் வழியெங்கும்
உன் உருவப் பதாகைகள்
நட்ட வலியில்
என் விழிகள்!
என் நிழலின் இருள் கூட
ஒளி தேக்கி வைக்கிறதே
நீ ஊற்றிய
பார்வைக் கதிர்களால்!
முன்னர் எனைக் கண்டு
தந்தி அடித்த
உன் பார்வைகள்
மாற்றாய் அடிக்கின்றனவே
நம் மணப்பத்திரிக்கையை!
என் பெயரை
உன் பெயர் ஈற்றோடு
உரசி நிறுத்தி
உச்சரித்து
உயிர் உறுவதாய்
என் மொழிகள்!
நீ பேசிக் கொட்டிய
வார்த்தைகளின் வெள்ளங்கள்
நடுநிசி தாண்டியும்
செவிகளில் பாய்வதால்
தூக்கத்தை அணை போடாது
இமை திறந்து வழிகின்றன்
என் இரவுகளின் விழிகள்!
உன்னோடான
ஓர் யுகம் கடந்த வாழ்வின்
ஒத்திகையை
ஒப்பனை செய்து கொண்டே
துடிப்பதாய்
என் நாட்களின் நாடிகள்!
சு.உமாதேவி