எது‌ சுதந்திரம்

#எது சுதந்திரம்..?

விடுதலை கிடைத்தும்
விடுதலை இல்லாமலே
வாழ்கிறோமே..!

இது சுதந்திரமா‌‌..?

சுதந்திரம் கிடைத்தும்
சுதந்திரம் இல்லாமலே
வாழ்கிறோமே‌..?

இது சுதந்திரமா..?

நினைத்து எல்லாம்
கிடைப்பது சுதந்திரமா..?
பிடித்து போல்
வாழ்வது சுதந்திரமா..?

உனக்காக வாழ்வது
சுதந்திரமா..?
பிறருக்காக வாழ்வது
சுதந்திரமா..?

சுதந்திரம் என்றால்
என்னவென்று தெரியாமல்
சுதந்திரமாய் வாழ்வது
சுதந்திரம் அல்ல..!

நமக்காக மட்டும்
சுதந்திரம் அல்ல!
நாட்டிற்காகவும்
போராட்டபட்டது தான்
சுதந்திரம்..!

நமக்கு கிடைக்க வேண்டிய
சுதந்திரம் என்றோ அடைந்து விட்டோம்...!
ஆனால் நம் நினைத்த சுதந்திரம்
இன்றும் நமக்கு கிடைக்கவில்லை..!

நம் நினைத்த சுதந்திரம்
என்று நமக்கு கிடைக்குமோ..!
அன்று தான் முழு சுதந்திரம்
அடையும் நம் நாடு.!
♥️🧡💚💜💙💜💚🧡♥️

✍️பாரதி

எழுதியவர் : பாரதி (6-Aug-20, 3:48 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
பார்வை : 367

மேலே