கல்வி சிறந்த தமிழ்நாடு-2020

அரசு உதவி பெறும்
பள்ளியொன்றில் ஆசிரியர்கட்கான
நேர்முகத் தேர்வில் கேட்டவை.
இடைநிலை ஆசிரியரா ;
ஆசிரியர் தகுதித்
தேர்வில் தேர்ச்சியும்
பத்து லட்சமும்.
பட்டதாரி ஆசிரியரா ;
ஆசிரியர் தகுதித்
தேர்வில் தேர்ச்சியும்
இருபது லட்சமும்.
முதுகலை ஆசிரியரா ;
எம்.எட்., எம்.ஃபில்., பி.எச்.டி.,
கூடுதல் தகுதியும்
முப்பது லட்சமும்.
தாளாளர் சொன்னார் :
உங்களுக்கே தெரியும்;
நிரந்தர வேலை,
நிலையான வசிப்பிடம்,
திருத்திய ஊதிய விகிதம்
2017 இன் படி
தமிழக அரசு ஊதியம்,
பணமாகத் தரவேண்டாம் ;
ஏதும் எங்களுக்கு .
வரைவோலையாய் வழங்கிடுக ;
எமது அறக்கட்டளைக்கு.
முதலில் வருபவர்க்கே முன்னுரிமை !
இயன்றவர்கள்...
கல்விப் பணியாற்ற
இங்கே
சேர வாரும்
செகத்தீரே !
-தீ.கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (9-Aug-20, 12:49 am)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
பார்வை : 939

மேலே