வானம் எல்லையா

வானம் எல்லையா????

பொய்யான சமூகமே!
போதும் உன் நொண்டி சமாதானம்!
ஏய் ஆதவனே! நீயுமா!
என் கனவை, கலைக்காதே!
நான் பாரதி கண்ட புதுமைப் பெண்! பாலைவனத்தை சோலையாக மாற்ற புறப்பட்ட சூறாவளி.
வானம் கூட தொடும் தூரம் தான் என்று நான் மற்றவர்கள் மாதிரி கூறமாட்டேன்.
காரணம், ஏற்கனவே என் ஆடை அதனை உலர்த்த வானத்தை கொடியாக பயன்படுத்தி வருகிறேன்.
பெண்களை பிள்ளை பெறும் கருவியாக நினைக்கும் கேடுகெட்ட சமூகமே!
உன்னை சீர்திருத்த பல யுத்திகளுடன், மகாசக்தியுடன்,  ஆறாவது பூதமாக அவதாரமெடுத்து விரைவில் வருவேன். அதுவரை காத்திரு.
நான் புதுமைப் பெண் அல்ல
பல மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் அதிசய பெண்.
-பாலு

எழுதியவர் : பாலு (9-Aug-20, 5:42 am)
பார்வை : 95

மேலே