கவிதை

கவிதைகள்
கடவுளின் படைப்பில்
உயிர் ஒவ்வொன்றும்
கவிதையாய்!

சில கவிதைகள்
வாசிப்பதற்காய்!

சில கவிதைகள்
சுவாசிப்பதற்காய்!

சில கவிதைகள்
நம்பிக்கை நாற்றின்
பாத்திகளாய்!

சில கவிதைகள்
வெறும் புகழ்ச்சிக்கு
ஆயுள் வரிகளைச்
சுமந்ததாய்!

சில கவிதைகள்
நோவுக்கு மருந்தாய்!

சில கவிதைகள்
இரவல் சொற்களில்
இன்புற்று இருப்பதாய்!

சில கவிதைகள்
தன் அர்த்தம்
தொலைத்துத் தேடுவதாய்!


சில கவிதைகள்
நல் வம்சத்தின்
விதை நெல் பெட்டிகளாய்!

சில கவிதைகள்
ஆயுள் வரிகளால்
பூமிக் காகித்த்தை
அடைத்துக் கொள்வதாய்!

சில கவிதைகள்
கிளைத்துக் கொளுத்து
விழுதுகளை விளைவித்து
ஆல் விருட்சமாய்!

சில கவிதைகள்
நடு கற்களின்
சதுக்கமாய்!

சில கவிதைகள்
தன் கால் தடங்களின்
சுவடுகளை செப்பி நிற்கும்
கல் வெட்டுக்களாய்!

சு.உமாதேவி

எழுதியவர் : சு.உமாதேவி (13-Aug-20, 8:26 am)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : kavithai
பார்வை : 152

மேலே