பாதையும் பயணமும்

நீயும் நானும் பயணம் செய்த வழக்கமான பாதையில்.
தொடர்பில்லா மனிதர்களுடன்
என் பயணம்.
மரங்கள் தோறும் நினைவு பூக்கள்.
வாகன சத்தமாய்
பேசிய வார்த்தைகள்.
காற்றில் மிதக்கிறது கண்ட கனவுகள்.
வளைவுகள் திருப்பங்களில் வாழ்க்கை நிதர்சனங்கள்.
பாதைகள் மாறவில்லை.
பயணங்கள் மாறியது.
கூட்டமான சாலையில்
தனிமையில் நான்.

எழுதியவர் : (14-Aug-20, 1:43 pm)
சேர்த்தது : Madhubala SR
பார்வை : 190

மேலே