முகநூல் பதிவு 72

ஆகஸ்டு 16 2016

தமிழ்மகள் பெற்றெடுத்த கவிமகனே....
இறுதி உறக்கத்திற்கு இப்போதென்ன அவசரம்.....?

உன் தூரிகை முனையில் பிரசவிக்க காத்திருந்த கவிசிசுக்கள் எத்தனையோ...
அவை பிறவி எடுக்கும் முன்பே மாண்டதே உன்னோடு....
காலனே..... நீ எடுத்துச் சென்றது ஓருயிரை அல்ல.... பல்லாயிரம் கவிமதலைகளை.....!
தடம் புரண்டு ஓடிக் கொண்டிருந்த திரைப்பாடல்களை தரத்தோடு தலைதூக்க வைத்து இதயத்தை ஆனந்த யாழால் மீட்டியவனே....
மலரோடு இலையை ரசித்தவனே
மழையோடு வெயிலையும் ரசித்தவனே...
எம் இதயத்தை முகாரி ராகத்தில் நனையவிட்டுச் சென்ற முத்துக் குமாரா.....
அகோரியாய் உனை உண்ட காலனால் உன் கவித் தடத்தை அழிக்க இயலாது... புவி உள்ளவரை அது வாழும்!

உன் இழப்பால் துயருற்ற எண்ணற்ற ரசிகர்களில் ஒருத்தி,
கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (14-Aug-20, 2:26 pm)
பார்வை : 59

மேலே