வாழ்க பாரதம் வாழ்கவே

விழித்து இருப்போம்
தனித்து இருப்போம்
வீட்டில் இருப்போம்....! !

இந்த வாசகங்கள் எல்லாம்
"கொரோனா" வை வீழ்த்திட
நாம் வகுத்து கொண்ட
வழிமுறைகள்...! !

ஆனால்..
நம் வாழ்வாதாரமும்
நாட்டின் பொருளாதாரமும்
சரிந்து விட்டது...! !

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை என்பது
"இந்தியன்" பெருமையடா...! !

ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
இனி பொறுத்தது போதும்
பொங்கி எழுவோம்
"பீனிக்ஸ்" பறவை போல்
வீழ்ந்த வாழ்வை
மீண்டும் பெறுவோம்
"கொரோனா" வின்
கட்டுப்பாட்டை மீறாமல்...! !

கொரோனாவுடன்
வாழ்வோம்
சாதனைகள்
பல படைப்போம்
வாழ்க பாரதம்
வாழ்க வாழ்கவே..! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Aug-20, 9:50 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 37

மேலே