தேசத்தின் தொப்புள்கொடி

அல்லும் பகலும்
அடிமைத்தனம் களைய
அரும்பாடு பட்டு இங்கு
நாட்டுக்காக வென
நல்லவர்கள் பலர் சேர்ந்து
நட்டு வைத்த கொடி...

இது..
வானம் வரைக்கும்
வாசம் பரப்பி
வளர்ந்து நிற்கிறது..
தியாக நீரால்.!!

இதன் நிழலில் கூட
மணந்திடும் எங்கள்
தேச பக்தியின் வாசம்.

இனம், மதம், மொழி
இவையனைத்தையும் கடந்து
எல்லோரையும் இணைக்கும்
இந்திய அன்னையின்
தொப்புள் கொடி இது.

சுதந்திரத்தை போற்றுவோம்
சுத்தமான எண்ணங்களுடன்.

ஜெய்ஹிந்த்.

எழுதியவர் : மருத கருப்பு (15-Aug-20, 9:17 am)
சேர்த்தது : மருத கருப்பு
பார்வை : 306

மேலே