எங்கே சுதந்திரம்

எங்கே சுதந்திரம் ...?

கொடியேற்றிக் கொண்டாட
விடுமுறையென அறிவித்து
இல்லங்களில் ஓய்வெடுத்து
இன்றைய நிகழ்ச்சிகளென
தொலைகாட்சியை பார்த்து
விடுதலைக்காக போராடிய
வீரர்களை தியாகிகளை
மறந்து மகிழ்ந்திருப்பதா ?

சாதிக்கொரு சங்கமொன்று
வீதிக்கொரு கட்சியொன்று
அமைப்பதும் ஆர்ப்பரிப்பதும்
மதவெறியை தலைக்கேற்றி
வாய்ச்சவடால் வாளேந்தி
வன்முறையை கட்டவிழ்த்து
நாளுக்கொன்று அரங்கேற்றி
அவலநிலை உருவாக்குவதா ?

சீர்கெட்ட அரசியலால்
சீரழிந்த சமுதாயத்தை
சீராக்கும் எண்ணமின்றி
சுயநல நோக்கமுடன்
சுத்தமிலா நெஞ்சங்கள்
சுற்றிச்சுற்றி உலாவரும்
செயல்படா செயலிகளாய்
செல்லரித்த தேசமானதே !

அழிக்கப்படா வறுமைக்கோடு
ஒழிக்கப்படா லஞ்சலாவண்யம்
தீர்க்கப்படா ஏற்றத்தாழ்வுநிலை
திருத்தப்படா சட்டதிட்டங்கள்
வாழவியலா வாழ்வாதாரம்
பாதுகாப்பிலா சமுதாயம்
சுதந்திரமிழந்த கருத்துரிமை
இதுவன்றோ இன்றையநிலை !

எங்கே சுதந்திரம் ?
என்று காண்போம் ?

பழனி குமார்
14.08.2020

எழுதியவர் : பழனி குமார் (15-Aug-20, 8:28 am)
பார்வை : 439

புதிய படைப்புகள்

மேலே