சுதந்திர நாடு

போராடிய தியாகிகளுக்கு புகழ் வணக்கம்...🙏

சுதந்திர நாடு என மார்தட்டிக் கொள்வோம்..

எங்கும் சில மூலைகளில்
வன்புணர்வால் வாடிடும்
பெண் குழந்தைகளின் நிலைகண்டு
சுதந்திர நாடு என மார்தட்டிக் கொள்வோம்..

அடிமைத்தனம் ஓயாத
பெண்களின் கண்ணீரைக் கொண்டு என்றும் சுதந்திர நாடு
என மார்தட்டிக் கொள்வோம்..

சாதியாலும் மதத்தாலும்
பிரிந்துகிடக்கும்
மானிடம் கண்டு பெருமையாய் நாமும்
சுதந்திர நாடு என
மார்தட்டிக் கொள்வோம்..

வயதான குடிமகனை
தெருவில் அலயவிட்டு
வேடிக்கை பார்க்கும் வரை
சுதந்திர நாடு என மார்தட்டிக் கொள்வோம்..

கருத்திடும் குரலை கரங்களால் நெரித்துவிட்டு மீண்டும் சுதந்திர நாடு
என மார்தட்டிக் கொள்வோம்..

உணவுக்காய் அலைந்திடும் பிஞ்சுகளின் முன் நின்று இது சுதந்திர நாடு என மார்தட்டிக் கொள்வோம்..

வேற்றுமையில் ஒற்றுமையை வேரோடுப் பிடிங்கிவிட்டு இது சுதந்திர நாடு என மார்தட்டிக் கொள்வோம்..

கல்வியும் வேலையையும்
பறித்துவிட்டு இளைஞனை தவிக்கவிட்டு நம் சுதந்திர நாடு என மார்தட்டிக் கொள்வோம்..

முன்னேறும் ஓர் இனத்தை
ஒரேடியாக அழிக்க முற்படும்போதெல்லாம்
இது சுதந்திர நாடு என மார்தட்டிக் கொள்வோம்..

பணத்தை வைத்து நீதி முடிவுசெய்கையில் இதுவும்
சுதந்திர நாடு என மார்தட்டிக் கொள்வோம்..

அயலான் அன்று கொன்றான்
நாம் இன்றும் கொல்கிறோம்
இது என்று தீரும் -அதுவரை
தேசம் தீயில் வாடும்.

தேசத்தாயின் அழுகுரல் கேட்கிறதா...?
அதை கேட்டுவிட்டும் நாம் சுதந்திர நாடு என மார்தட்டிக் கொள்வோம்..

ஜெய் ஹிந்த்...😊😊😊
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

எழுதியவர் : ஹாருன் பாஷா (15-Aug-20, 7:34 am)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : suthanthira naadu
பார்வை : 47

மேலே