சுதந்திரம் பெற்றோமா

சுதந்திரம் தந்த தியாகிகளே /
எங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு ....
அந்நியனின் அடிமைத் தளையில்
சிக்கித் தவித்தோம் என்று நீங்கள்
பெரும் நோக்குடன் பெற்றுத் தந்த
சுதந்திரம் தலைநிமிர்ந்து வாழ
வழி தெரியாது
விழி பிதுங்கி நிற்கிறது இன்று.
நாங்கள் செய்த பிழைகள் எதுவாக /
காலம் செய்த கோலங்களா/ இல்லை
கலியுகம் காட்டிய அதர்மங்களா/
புரியாத புதிராக சுதந்திர தினம்
கொண்டாடுகிறோம்
ஒன்றா இரண்டா சொல்ல முடியவில்லை
ஒவ்வொரு குடிமகனும் சிந்திப்பது
இது என்ன சுதந்திரம்
இது தரும் பாடங்கள் என்ன/
அர்த்தம் விளங்காது ஆச்சரியத்தில்
சுதந்திரம் கன்னத்தில் கைவைக்கிறது

எழுதியவர் : பாத்திமாமலர் (15-Aug-20, 12:12 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 1752

மேலே