சுதந்திர இந்தியா

இன்று சுதந்திரமாய் சுதந்திர பறவையாய்
கன்னியாகுமாரி முதல் வடக்கே இமயம்வரை
திரிந்து வருகிறோம் நாம் இந்த
சுதந்திரம் அடைந்திட நம் முன்னோர்கள்
பலர் சிந்திய ரத்தம் சிறை வாசம்.......
அப்பப்பா சரித்திர ஏடுகள் புரட்டிப்பார்க்க
இன்றும் ரத்த கண்ணீர் சிந்தவைக்கும்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்
தன் தொழிலை விட்டு ஆங்கிலேயரை வெளியேற்ற
சிறை சென்றார் செக்கிழுத்தார் தன் சொந்த
தனமெல்லாம் செலவு செய்து பாடுபட்டார்
தன்னலமில்லா தேசிய வாதி ஒப்பற்ற
தேசத் தியாகி.... இன்னும் வாஞ்சி அய்யர்
சரித்திர காலத்தில் கட்டபொம்மன் என்று
அடுக்கிக்கொண்டே போகலாம்
இறுதியில் கத்தி இன்றி ரத்தம் இன்றி
அறவழியில் போரிட்டு வெள்ளையனை வெளியேற்றி
சுதந்திரம் வாங்கித்தந்த 'தேசத்து தந்தை'
காந்தி ... இன்னும் சுபாஷு சந்திரா போஸ்
மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு
ராஜாஜி .காமராஜர்......
இப்படி இந்த தியாகிகள் பெற்று தந்த
சுதந்திரம் காத்திடல் நம் ஒவ்வொருவரின் கடமை
தேசத்தைக் காப்போம் தேசம் நம் தாய்
தேசப்பற்றை வளர்ப்போம் ஆல்போல்
ஒற்றுமையாய் வாழ்ந்திட வேண்டும்
நம்மில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் இல்லை
கீழ் ஜாதி மேல்ஜாதியினர் என்று இல்லை
நாம் எல்லோரும் இந்தியர் இந்நாட்டு மன்னரே
நாட்டிற்கு உழைப்போம் நாட்டின் உயர்வுக்கு பாடுபடுவோம்
அஞானம் நீங்கி அப்துல் கலாம் காட்டும்
விஞானப் பாதையில் முன்னேறுவோம் அதில்
அறிந்திடுவோம் மெய்ஞானமும் உண்டு
இறைவன் நம்பிக்கையும் ........


தாயின் மணிக்கொடி பறக்குது இன்று
இதைத் தாழ்ந்து பணிந்து வணங்கிடுவோம்
'ஜெய் ஹிந்த்; ;ஜெய் ஹிந்த்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

இன்றுபோல் என்றும் சுதந்திரமாய் இனிதே
வாழ்ந்திடுவோம் கொரோனா பிடியிலிருந்து
சீக்கிரமே விடுபட்டு பயம் நீங்கி வாழ்ந்திடுவோம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Aug-20, 1:45 pm)
Tanglish : suthanthira indiaa
பார்வை : 38

மேலே