உன்னை மட்டும் உயிராக நேசித்தேன் 555

ப்ரியமானவளே...


இரவும் பகலும் நித்தம்
நித்தம் வந்து செல்லும்...

உன் நினைவுகளை போல நீயும்
என் முன்னே வந்துவிட்டதே...

மீண்டும் என் இதயம் உனக்காக
துடிக்க ஆரமித்துவிடும்...


நீ சொல்லும் சின்ன சின்ன
பொய்களை எல்லாம் ரசித்தேன்...


எதையும் ரசிப்பேன் என்று
உண்மையை சொல்லிவிட்டாய்...


உன் காதலும்
பொய்யென்று...


குளமாகிய என் கணகளின் எதிரில்
வந்து மீன் பிடித்துவிடாதே...

மீண்டும் வலிகளை தாங்கும்
வலிமை
என் இதயத்திற்கு இல்லை...

உன்னை
உயிராக
நினைத்தேன்...

உயிரை பறிக்கிறாய்
தினம் தினம் வலிகளால்.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (17-Aug-20, 6:29 pm)
பார்வை : 923

மேலே