அப்துல்கலாம் ஐயா
*அ*கிலம் போற்றும் மாமனிதரே!
*ஆ*தவனும்
நின்தாள் பணிவான்
உமது நற்பணிக்காக
*இ*ந்தியா 2020இல் வல்லரசாகுமென்றீர்
ஆனால்
*ஈ*ரேழுலகமும் கண்டு அஞ்சுகிறது
ஓர் நுண்ணுயிர் கொல்லியின் முன்பு
*உ*லகத்தை படித்த உத்தமரே!
*ஊ*தியம் ஒன்றே
போதுமென்று நின்ற
செங்கோலே!
*எ*ளிமையின் தூயவரே!
*ஏ*ழ்மையில் பயணித்தவரே !
*ஐ*யமே ,
எழுகிறது
இந்நாடு வல்லரசின்
உச்சத்தை தொடுமா என்று!
*ஒ*ற்றை மனதும் கனக்கிறது
ஐயா!
*ஓ*ய்விடம் தேடி
நீர் சென்றதால்;
*ஔ*டதமாய்
எமக்கு இங்கு வழிகாட்டுவது உமது அறிவுரையே;
*ஃ*க்காய் பெற்று அளக்க சென்றாயோ;
பால்வெளி அண்டத்தை!
உன் பணியை வாழ்த்த வயதில்லாமல்போகவே ;
என்
உயிர்மெய் கொண்டே
உன்தாள் பணிகிறேன்💐💐💐