கல்லூரி காதல் 🌹
கல்லூரி காதல்🌹
முதல் நாளே முழு நிலவின் தரிசனம்.
முதல் நாளே தென்றல் தீண்டிய ஆனந்தம் .
முதல் நாளே பூ மழையில் நினைந்த அனுபவம்.
முதல் நாளே இதயத்தை தாலாட்டிய சுகம்.
முதல் நாளே முத்திரை பதித்த கல்லூரி காதல்.
சிந்தனையில் கலந்து விட்ட என் அழகு சிங்காரமே.
குயிலன பேசும் இன்னிசை மழையே.
மின்சார கண்களால் காதல் ஒளி விளக்கை என் மனதில் ஏற்றிய மாய மோகினியே.
மயக்கம் விழிகளால் மந்திரம் பல செய்யும் அழகு தேவதையே.
என் செய்வேன் கண்டதும் காதல் கொண்டேன் உன் மீது.
மஞ்சள் வெய்யில் பட்டதும் பொன் என மின்னும் மேனியாள்.
மாலையில் பூக்கும் மணக்கும் மல்லிகை பூ இதழாள்.
மது குடத்தை சுமக்கும் கொடி இடையாள்.
மங்கை அவள் தெந்தாமரை பாதம் உடையாள்.
கல்லூரி பாடத்துடன் காதல் பாடமும் படிப்போமே.
கஸ்தூரி மானே
கல்வியுடன் காதலையும் கலப்போமே.
இந்திரலோகத்து சுந்தரியே
ஏட்டு படிப்புடன் வீட்டு படிப்பும் படிப்போமே.
தேவதை கூட்டத்தை தலைவியே
கல்வியை கவனமுடனும்
காதலை நம் சுவாசமாக என்னுவோமே.
- பாலு.