ஆயிரம் முத்தங்களுடன் அன்பானவள் 555

ப்ரியமானவளே...


நீயும் நானும் சந்திக்கும் நேரத்தில்
வரும் சந்தோசங்களை...

நீ விடைபெறும் நிமிடங்களில்
எடுத்து செல்கிறாயாடி...

மீண்டும் உன்னை
எப்போது சந்திப்பேனென்று...

கைபேசியில் நீ ஆயிரம்
முத்தங்கள் கொடுத்தாலும்...

நேரில் என் கரம் கோர்த்து
நடக்கும் இன்பத்திற்கு ஈடாகுமா...

ஆயிரம் முத்தங்களுடன்
அன்பானவள் என்று...

நீ குறுந்செய்தி
எனக்கு அனுப்பினாலும்...

நேரில் கிள்ளி அடித்து போடா
என்று கொஞ்சுதலுக்கு ஈடாகுமா...

என்னிடம் நீ
விடைபெறும் நிமிடங்களில்...

உன்னை அதிகம்
நேசிக்கிறேனடி நான்.....



முதல் பூ பெ.மணி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (19-Aug-20, 6:41 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 381

மேலே