குடையும் கூரையும் வேண்டாமே

பூமியை புதுப்பிக்கும் பூமரங்கள்
தென்றலின் மிதவேகத்தில்
மரக்கிளையாடும் நர்த்தனங்கள்
வான் வீசும் தூறல்களில் வளமாகும் வயல்வெளிகள்
இலை தவழ்ந்த சிறுமழைத்துளியை ஈர்க்க காத்திருக்கும் புல்லினங்கள்
அலைந்து தவழ்கின்ற தென்றலுக்கு
தலைசாய்த்து நாணுகின்ற நாணல்கள்
பூமியின் புழுதிக்காற்றுகளை சலவை செய்யும் பூமரங்கள்
வீழ்ந்த தூறல்களை வலைவீசி சேர்தெடுத்து வாரிச்சுருட்டி வந்துவிழும் நீர்வீழ்ச்சிகள்
மலையின் முகடுகளில் மகரந்தம் செய்யும் மேகங்கள்
சூல்தரித்த பின்னாலே ஆர்ப்பரிக்கும் சத்தத்தோடு பெருகி தெரிக்கும் மழைத்துளிகள்
குடைபிடிக்கும் மனிதர்களே அடைமழையில் குளித்ததுண்டா
அந்த ஈரக்காற்றில் உங்கள் இதயம் மிதந்ததுண்டா
தடைபோட இது இடைக்கால உத்தரவல்ல
இயற்கையின் உற்சவம்
கையில் இருக்கும் குடைகளை காற்றில் பறக்க விடுங்கள்
உங்கள் கைநிரம்ப மழைத்துளி சேருங்கள்
அதில் உங்கள் முகம் பாருங்கள்
உங்கள் வீட்டுக்கூரைகளை கூட நீங்கள் உடைக்க நேரிடலாம்

எழுதியவர் : இளவல் (20-Aug-20, 12:11 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 93

மேலே