மரமும் வாழ்வும்
தரை தொடமுனைந்த மழைத்துளியை தடுத்த அடர்இலைபடர்ந்த மரம்
ஒளிக்கு திரைபோட்டு தழைத்தோங்கி நின்ற விருட்சம்
நிழல் மட்டுமே அதன் அடியில் நிரந்தரம்
காற்றிடை நடந்த ஊடலில் ஊ வென்றது
உதிர்ந்த சருகுகள்
தென்றலின் தலையாட்ட வைக்கும் முயற்சி தோற்றுப்போனது கிளைகளின் நெருக்கத்தால்
திக்கி திணறி நுழைந்த தென்றல்
தாங்கி சென்றது இலையோடு உரசிய இசையை மட்டுமே
தப்பித்தவறி நுழைந்த ஒரு மழைத்துளி
இடைவெளி நுழைந்து அடி வரை அமைத்தது ஒரு வெளிர் கோடு
அந்த வெள்ளத்தைக்கண்டு விலகி
ஓடியது எறும்புக்கூட்டம்
கிளையில் புலர்ந்த பூக்களோ
ஒரு துளி கிழித்தை கோட்டினில் முகம்
பார்த்து வெட்கிச்சிரித்தது
வெட்கச்சத்தம் வெளியில் கேட்க
விரைந்தன வண்டுகள் தேன் தேடி
மகரந்தம் கூட மணமகன் வருகை
மலர்களின் நாணம் வார்த்தையில் சொல்ல எழுத்துக்கள் இல்லை
மரங்களில் இருந்து புது கானகம் காண
பறந்தன வண்டுகள்