முட்டாள் நான்
நான் நிலைக் கண்ணாடிக்குள்
நிற்கும் உருவம் மட்டும் பார்ப்பவள்..!
உள்ளம் பிரதிபலிப்பதை உணர முடியாதவள்...! நான் சரியானவள் அல்ல.. சில நேரங்களில் முட்டாள் தனம் நிறைந்தவளும் கூட ...
அன்பினை அறியாதவள்..! தேவையில்லா நேரங்களில் அழவும், சிரிக்கவும் செய்பவள்...
சற்று வேடிக்கையானவள் தான் என்றாலும் இடத்திற்குத்தகுந்தாற் போல் நிறம் மாறும் பச்சோந்தி அல்ல நான்.... ஒவ்வொரு நாளும்
முட்டாளாகிப் போகிறேன்... என்னைச் சுற்றியுள்ளவர்கள் "மகிழ்ச்சியாக
சிரிக்க வேண்டும்" என்பதற்காக....! அதிக அறிவற்றவன் முட்டாள் இல்லை. அதிக அன்பு உள்ளவன் மட்டுமே முட்டாள்... தான் விதைக்கும் விதைகள் அத்தனையும் விளையும் என்று யோசிப்பவன் முட்டாள் அதில் களைகளும் கலந்திருக்கும் என்று யோசிப்பவன் தான் எதார்த்தமானவன்... என்னை முட்டாள் என்றுச் சொல்லும் அளவிற்கு இங்கு அறிவாளிகளும் இல்லை... நான் மட்டுமே அறிவாளி என்று சொல்லுமளவிற்கு இங்கு முட்டாள்களும் இல்லை..
✍🏻 பாக்யா மணிவண்ணன்.