லஞ்சமும் கடமையும்

-------------------------
நம்மில் பலர் நேரில் காணா
ஆயினும் திரையில் கண்ட
பல அரசு மருத்துவமனைகள்..
காசை கண்டதும் உடன்
கதவை திறக்கும் காவலாளி..
ஓசியில் ஊசி போடா
செருக்கு முக செவிலியர்..
தன் தனியார் சிகிச்சையகத்திற்கு
அன்புடன் அழைக்கும் மருத்துவர்கள்..
பணத்தை பொறுத்து பதமாக
கட்டு போடும் கம்பவுண்டர்..
விபத்தில் விழுந்தவனை தனியாருக்கு
விற்கும் அவசர வாகன ஓட்டுனர்..

பொது ஜன நலன் பேணும் நல்லோர்
சிலர் என்றுமுண்டு எங்குமுண்டு..
கொரோனா வந்தது இங்கே
கல் மனதிலும் கருணை மலர்ந்ததே..
கையில் காசு எதிர்பாராது இங்கே
எல்லோரும் தன்கடமை ஆற்றுகின்றனரே ..
தனியார் மருத்துவமனை எல்லாம்
தன்னலம் கருதி தாழிட்டு கொண்டனரே..
அரசு மருத்துவர்கள் எல்லாம்
அவரில்லம் மறந்து பணி செய்கின்றனரே..
செவிலியர்கள் தொற்று தன்னை தொடும்
என்றறிந்தும் துணிந்து பணி செய்கின்றனரே..
பிணவறையில் பணம் பார்த்த சிலர்
பிணம் தாங்கி இடுகாடாய் அழைகின்றனரே..
கடவுள் நம்மை காப்பார் என்போருக்கும்
நடமாடும் கடவுள்கள் நீவீர் எல்லோரும்..
நின் பணி சிறக்கட்டும் என்றும்
நின் குடும்பத்தினர் செழிக்கட்டும்..
---------------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (20-Aug-20, 11:02 pm)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : lanjamum kadamayum
பார்வை : 414

மேலே