உள்ளவரை படும்பாடு
வானம் ஒன்று
சூரியன் ஒன்று
நிலவு ஒன்று
பூமி ஒன்று
நீரும் ஒன்று
காற்றும் ஒன்று
பிறப்பும் ஒன்று
இறப்பும் ஒன்று
சுவாசம் ஒன்று
உணர்வும் ஒன்று !
பொழுதுகள் இரண்டு
( பகல், இரவு )
பாகுபாடுகள் இரண்டு
( ஏழை,பணக்காரன் )
நிலைகள் இரண்டு
( உயர்ந்தவன்,தாழ்ந்தவன் ) !
பாலினங்கள் மூன்று !
( ஆண்,பெண்,திருநங்கை )
ஆனால் ,
சாதிமதங்கள் பலவகை
சச்சரவுகள் பலவகை
கட்சிகள் பலவகை
கனவுகள் பலவகை
கொள்கைகள் பலவகை
குணங்கள் பலவகை
உறவுகள் பலவகை
உயிரினங்கள் பலவகை !
இயற்கையின் வேறுபாடு
இதயத்தால் மாறுபாடு !
தொடர்வது நிலைப்பாடு
உள்ளவரை படும்பாடு !
பழனி குமார்
21.08.2020