போதாத நேரம்
பொல்லாத உலகத்தில்
போதாத நேரம் !
நீரிடம் நீதியில்லை என்று
பூனையிடம் புகலிடம் கேட்டது மீன் !!!!!!!!!!!!!!
கோழியிடம் கோவித்துக்கொண்டு
பருந்திடம் பாதுகாப்பு கேட்கும் கோழிக்குஞ்சு !!!!!!!!!!!!!!
சேற்றை விட்டுவிட்டு
செந்நாகத்திடம் சேர்ந்த தவளை !!!!!!!!!!!!!!!
கதையை நம்பி
முதலையின் முதுகில் ஏறிய குரங்கு !!!!!!!!!!!!
உணவிற்கு ஆசைப்பட்டு
உயிரை இழந்த எலி !!!!!!!!!!!!!!!
இது எல்லாம் இன்றைய மனிதனின் எதார்த்தம் -
புரிந்தும் புரியாத மனிதனின் கோர குணங்களால்
கொலையாகும் அப்பாவி மனிதன்தான் எத்தனை எத்தனை ?