துப்பிய கவிதை
ஓய்ந்த மழைச்சாலையில்
கிடந்த காகிதத்தில்
ஒரு கவிதை!
எடுத்தான், படித்தான்
கடைசி வரி,
'படித்ததும் கிழித்துவிடு!'
படம்பிடித்து பேசுபுக்கில் போட்டான்,
கிழிக்காமல் கீழே போட்டான்.
'த்தூ..'வெனத் தெளித்தது
நீரில் விழுந்த கவிதை!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
