தோனி
கிரிக்கெட் உலக ரசிக கூட்டத்தின்
ஏழுமலையான் இவன்..
ராஞ்சி மண்ணில் பிறந்த
ரன் இயந்திரன் இவன்..
சென்னை தத்தெடுத்து விசிலடித்து
கொண்டாடும் தல பிள்ளை இவன்..
தலை முடி கனத்திருந்த போதும்
தலைக்கனம் இல்லாதவன்..
அணி தலைவன் ஆனபின்னும்
அகங்காரம் கொள்ளாதவன்..
கடைசி பந்து வரை களத்திலிருந்து
பந்தை பவுண்டரிக்கு பந்தாடுவான்..
வானூர்தியும் வானுக்குள் ஒளிந்தோடும்
இவன் ஹெலிகாப்டர் அடி பார்த்து..
இவன் கையிருக்கும் மட்டையும் மன்றாடும்
எதிரி கையிருக்கும் பந்தும் கதறி அழுதிடும்..
இவன் களமிறங்கி நடக்கும் மிடுக்கு நடையில்
எதிர் பவுலர்களின் காலாடையுள் நனையும் ..
கடைசி பந்தில் ஆறு ரன் அடிப்பது
கை வந்த கலை இவனுக்கு..
அணியினரின் திறனறிந்து காலமறிந்து
திறமையை வெளிகொணர்வான்..
கையுறை அணிந்து கீப்பராக நிற்கையிலே
ஒலி ஒளி வேகத்தை தோற்க்கடிப்பவன்..
மூணு வித உலக கோப்பை வென்ற
ஒப்பற்ற கிரிக்கெட் வீரன்..
தோற்ற போட்டியின் தவறுகளை களைந்து
புதிய உத்திகளை களமிறக்குவான்..
எதிரணியின் திறமைக்கு என்றும்
மதிப்பளித்து மரியாதை தருபவன்..
ஊதா நிறமோ மஞ்சள் நிற ஆடையோ
இவனுக்கு எல்லாம் பொருந்தும்..
இராணுவ கவுரவ பதவி கொண்டு நாட்டு
இளைஞனுக்கு எல்லை கனவு கொடுத்தவன்..
இவன் புன்னகையை விரும்பாத
மனிதன் இல்லை இப்புவியில்..
வெற்றி தோல்வி யாவுணர்ச்சியும்
இவனுக்கு என்றும் சமம்..
உலகினர் இட்ட பெயர் இவனுக்கு
கேப்டன் கூல் அதனால்..
தலைமை பொறுப்பென்ற வார்த்தைக்கு
தன்னிகரில்லா எடுத்துக்காட்டிவன்..
விளம்பர கம்பெனிக்காரன் எல்லாம்
இவன் வீட்டு வாசல் நிற்பான்..
தோனியென்ற வீரன் இல்லா
இந்திய அணியை நினைக்க மனமில்லை..
அரசியலுக்கு காமராஜர் கிரிக்கெட்டுக்கு தோனி
திரும்பி கிடைக்கா திருமகன்கள்..
--------------
சாம்.சரவணன்