பட்டவன்

அசிங்கப்பட்டு
ஆத்திரப்பட்டு
இழிவுப்பட்டு
ஈனப்பட்டு
உலுக்கப்பட்டு
ஊதப்பட்டு
எழப்பட்டு
ஏக்கப்பட்டு
ஐயப்பட்டு
ஒழியப்பட்டு
ஓடப்பட்டு
தமிழின் உயிரெழுத்தாய்
இந்த வாழ்க்கையோடு வாக்கப்பட்டு
பட்டென பட்டுப்போகாமல் பக்குவப்பட்டு
ஏனோ பட்டுக்கொண்டே பயணப்பட்டு
கந்தல் ஆனாலும் தரம்தாழா பட்டு
- பட்டவன் (BUT அவன்???)

எழுதியவர் : காவேரி நாதன் (24-Aug-20, 2:38 pm)
சேர்த்தது : KAVERINATHAN
பார்வை : 44

மேலே