திண்ணைப் பேச்சு
நாம் நினைப்பது
நடப்பதில்லை
நடந்தவை யாவும்
நிலைப்பதில்லை....! !
இருந்தபோதும்... நாம்
எதையும் நினைக்காமல்
இருக்க முடிவதில்லை..! !
நடப்பது எல்லாம்
நாராயணன்
செயல்யென்றும்
நடக்கவில்லை என்றால்
ஈஸ்வரன் செயல் என்றும்
தலையெழுத்து என்றும்
கர்மவினையென்றும்
கடவுள் மேல் குற்றம் சொல்லி
முயற்சி எதுவும் செய்யாமல்
இப்படி திண்ணைப் பேச்சு
பேசுவதிலும் அர்த்தமில்லை..! !
முயற்சியுடையார்
இகழ்ச்சி அடையார்
என்ற வள்ளுவன்
குறள் போல்
முயற்சி செய்து
கொண்டே இருக்க
ஓரு நாள் நிச்சயம்
வானம் வசப்படும்...! !
--கோவை சுபா