சந்தோசம்
உடைந்து விடாமல் என்னை
ஒட்ட வைக்க
வேண்டும் சந்தோஸம்
சந்தோஸம் என்றால் என்ன
போதை தரும்
பேதை மனம்
யாதும் அரியா
ஓர் ரகசியம்
பேசும் விழியும்
பார்க்கும் செவியும்
சுவாசிக்கும் வாயும்
கேட்கும் மூக்கும்
அனைத்திற்கு முன்னே
எந்த உருப்பு பயன்பெரும்
சந்தோஸத்தினால்
எந்த உருப்பு அதை தரும்
பயனுருவதால்
உருப்பா
உணர்வா
வேதியலாய் ரசாயன மாற்றம்
விலங்கியலாய் உருப்பின் உணர்ச்சி
கணிதமாய் உறவின் கூட்டல் பெருக்கல்
இயற்பியலாய் உயர் நிலையின் புவியீர்பு
உளவியலாய் மனதின் மாற்றம்
உருவமில்லா ஒன்று
உருவானதின்று ஓர் முடிவில்
கவிதையாய் சந்தோசம்.