வா விளையாடலாம்

நீயும் எழுந்து வா
விளையாடலாம் பெண்ணே .
நீயும் ஒலிம்பிக் போட்டியில்
தங்கம் வெல்லலாம் கண்ணே.
நீ அடுப்பங்கரை தான் அடைக்கலம்
என்று எண்ணலாமோ பெண்ணே.
நீ எடுக்கும் முயற்சி வெற்றி
கொடுக்குமடி கண்ணே .

கட்டம் போட்ட விளையாட்டும்
பல்லாங்குழியும் தான் பெண்ணின்
விளையாட்டு அல்ல பெண்ணே.
பலுத்தூக்கி உன் பலத்தைக் காட்டலாம்
வா கண்ணே.
உமக்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும்
பெருமை சேர்க்கும் விளையாட்டு
எத்தனையோ உண்டு பெண்ணே.
உமக்கு நீயே வேலி இட்டு
வாழாது விளையாட்டிலும் சாதனை
புரியலாம் வெளியே வா கண்ணே.

தரை தொடும் ஆடை தமிழர் பண்பாடு தான்
அதற்காக தடை தாண்டி ஓட்டத்துக்குத்
தடை போடலாமோ பெண்ணே.
வெள்ளி வென்றாலும்
வெங்களம் வென்றாலும்
அது உமக்கான அடையாளச் சின்னமடி கண்ணே.
அதை அடைய வேண்டும் என்று விளையாடத்
துணிந்து வாயேன்டி கண்ணே ..

கரண்டி பிடிக்கும் கரம் விமானம் ஓட்டுகிறது.
காப்பு போட்ட. கைகள் துப்பாக்கி தூக்குகின்றது
கொலுசு போட்ட கால்கள் மட்டும் ஏன்
தயங்க வேண்டுமடி பெண்ணே.
தைரியம் கொண்டு ஓடிடு
வெற்றியைக் கண்டிடு கண்ணே.

விளையாட்டை விளையாட்டாக நினைக்காமல்
விவரமாக அறிந்து புரிந்து சரிவரக் கற்று
எதிரியை வென்று சாதனை புரிந்தால்
நாளை உன் பெயரும் சரித்திரம் படைக்குமடி
இதில் விசித்திரம் இல்லையடி பெண்ணே.
சாதனைப் புத்தகத்திலும் (கின்னஸ்)
உனக்கு என்று ஓர் இடம் காண்பாயெடி
கண்ணே வா விளையாடலாம்.





எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (25-Aug-20, 6:53 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : vaa vilaiyaadalaam
பார்வை : 49

மேலே